கோவையில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க அக்டோபர் 19, 2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமே ஏற்கப்படும்.



கோவை: கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-ன் கீழ் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற வேண்டும்.

ஏற்கனவே செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6, 2024 வரை இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது, சென்னை அரசு முதன்மைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 19, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெடிபொருள் சட்டவிதிகள் 2008 விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அக்டோபர் 19-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, அதற்கான தகவலை இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அனுமதியின்றி அல்லது உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...