அன்னூர் அருகே தனியார் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க இந்த செயலி உதவும்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாணவிகள் எளிதாக காவல்துறையை அணுகி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவிநாசி காவல் நிலைய மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பத்மாவதி தலைமை வகித்தார். சேவூர் காவல் நிலைய தலைமை காவலர் அலமேலு மங்கை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து காவல்துறை பெண் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், 'போலீஸ் அக்கா' செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (8ஆம் தேதி) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...