ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - கோவை பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை

கோவையில் பட்டாசு விற்பனையாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ஆன்லைன் பட்டாசு விற்பனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, அரசு இதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


Coimbatore: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை இன்று (அக்டோபர் 9) சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும், ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் பட்டாசு விற்பனையை உடனடியாக தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பற்ற முறையில், வழக்கமான போக்குவரத்து வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது," என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

வியாபார உரிமம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வியாபார உரிமத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

சரவெடி தயாரிப்பு குறித்தும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். "சரவெடியை பழைய முறைப்படி இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும். அரசு கூறிய புதிய நிபந்தனைகளின்படி சரவெடியை தயாரிக்க இயலாது," என்று அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்த நோட்டீஸ்களை அனைத்து பட்டாசு கடைகளிலும் வழங்க உள்ளோம். மேலும், 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்ற வாசகத்துடன் கடைகளில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும்," என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...