கோவை திரு.வி.க நகரில் சாலை சேதம்: பொதுமக்கள் சாலை மறியல்

கோவை உருமாண்டம்பாளையம் திரு.வி.க நகரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்படாமல் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை உருமாண்டம்பாளையம் 14-வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை.



கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. நேற்று இரவு, இப்பகுதியை சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது தோண்டப்பட்ட குழியில் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்தப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக 14-வது வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ் தலைமையில் வெள்ளக்கிணறு முதல் கணபதி வரை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 14-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சித்ரா தங்கவேலு, உதவி பொறியாளர் உத்தமன், துடியலூர் காவல்துறையினர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக வேலைகள் செய்து சாலையை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...