சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடமாடி வருகிறது. முன்னர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர், நெல்லித்துறை, தாசம்பாளையம் போன்ற கிராமங்களில் அதிகம் நடமாடிய இந்த யானை, அண்மைக்காலமாக சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வருகிறது.



இந்நிலையில், இன்று இரவு சுமார் 7:00 மணியளவில் காட்டு யானை பாகுபலி சிறுமுகை-லிங்கபுரம் சாலையில் லிங்கபுரம் கிராமத்தின் அருகே நடந்து வந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானை சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த நிலையில், இது குறித்து உடனடியாக உள்ளூர் மக்களுக்கும், சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் லிங்காபுரம் ஊர் மக்கள் இணைந்து டார்ச் லைட்டுகளை அடித்து, சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை பாகுபலியை அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கு முன்னதாக, காட்டு யானை பாகுபலி சாலையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு சாலையின் நடுவே நின்றதால், அந்த வழியாக வந்த வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...