கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் ரொக்கம் பறித்ததோடு, செல்போனில் ஜி-பே மூலம் ரூ.12 ஆயிரத்தை பரிமாற்றம் செய்து 4 பேர் கொண்ட கும்பல் தப்பியோடிய சம்பவம் இது. மொத்தம் ரூ.19 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சஞ்சய் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள புஜ்ஜி விக்னேஷ், ஆகாஷ் ஆகியோரை தேடி தனிப்படை போலீசார் தீவிர வலைவீசி வருகின்றனர்.


Coimbatore: கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் ஒருவரிடம் கத்திமுனையில் மிரட்டி ரூ.19 ஆயிரம் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை இருகூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் மிதுன்குமார் (வயது 29) எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மிதுன்குமார் புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தது.

கண் இமைக்கும் நேரத்தில் மிதுன்குமாரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ.7 ஆயிரத்தை பறித்துக் கொண்ட அந்த கும்பல், மேலும் அவரது செல்போனை பறித்து 'ஜி-பே' செயலி மூலமாக தங்களது வங்கிக் கணக்கிற்கு ரூ.12 ஆயிரத்தை உடனடியாக பரிமாற்றம் செய்து கொண்டது. பின்னர் செல்போனை அவரிடமே வீசி எறிந்து விட்டு தப்பி ஓடியது.

பட்டப்பகலில் கத்திமுனையில் ரூ.19 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து மிதுன்குமார் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புலியகுளம் அம்மன்குளம் ஜி.எச். காலனியைச் சேர்ந்த உமாசங்கர் மகன் சஞ்சய் (25), அதே பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி சரவணன் மகன் நவீன்குமார் (23) மற்றும் இவர்களது கூட்டாளிகளான புஜ்ஜி விக்னேஷ், ஆகாஷ் ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலமானது.

இதை அடுத்து சஞ்சய் மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள புஜ்ஜி விக்னேஷ், ஆகாஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...