கோவையில் கனமழை: கணுவாய் தடுப்பணை நிரம்பி வழிந்தோடும் நீர் - போக்குவரத்து பாதிப்பு

கோவையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் கணுவாய் தடுப்பணை நிரம்பி வழிந்தோடுகிறது. கணுவாய்-பன்னீர்மடை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.


Coimbatore: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணை நிறைந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.



கோவையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை கணுவாய் பகுதியில் உள்ள தடுப்பணை முழுவதும் நிரம்பி மழை நீர் பெருக்கெடுத்து சங்கணூர் பள்ளம் வழியாக சென்றது. தடுப்பணையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கணுவாய்-பன்னீர்மடை இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



பொதுமக்கள் இப்பகுதியில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...