பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு: தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் மற்றும் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலை மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று (அக்டோபர் 13) காலை 6 மணி நிலவரப்படி 91.50 அடியாக உள்ளது.

மேலும் அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையிலிருந்து நீர் திறப்பு ஏதுமில்லை. இன்று காலை 6 மணி நிலவரப்படி குந்தாவில் 37, கெத்தையில் 46, பரளியில் 28, பில்லூர் அணை பகுதியில் 21, அவலாஞ்சி பகுதியில் 15 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (அக்டோபர் 12) 9 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 86.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தற்போது அணையின் நீர் மட்டம் 91.50 அடியாக ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...