கோவை: பொன்னூத்து அருவியில் வெள்ளப்பெருக்கு - பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை

கோவையில் தொடர் கனமழை காரணமாக, துடியலூர் அருகே உள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவில் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் செல்ல முடியவில்லை.



கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, துடியலூர் அருகே உள்ள வரப்பாளையத்தில் அமைந்துள்ள பொன்னூத்து அம்மன் கோவில் மலையில் இருந்து பாயும் பொன்னூத்து அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கோவையில் ஏற்பட்டுள்ள இந்த கனமழையின் விளைவாக, பொன்னூத்து அம்மன் கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் அருவியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதி மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...