திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு: லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது

திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையத்தில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து மூன்று நாட்களாக தண்ணீர் வீணாகிறது. உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க மூன்று கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நான்காவதாக மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், திருப்பூர் கல்லூரி சாலை காவிளிபாளையம் பகுதியில் இத்திட்டத்தின் குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக இந்த நிலை தொடர்வதால், அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்களை சிக்கனமாக தண்ணீர் பயன்படுத்த வலியுறுத்தும் மாநகராட்சி, இந்த குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...