கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Coimbatore: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.










கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.








முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இளைஞர் அணியின் செயல்பாடுகள் மற்றும் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் செயல்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.








இந்நிகழ்வில், செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. இ. பிரகாஷ் எம்.பி, மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...