பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். திருத்தேரோட்டம் ஐந்தாம் நாளில் நடைபெற இருக்கிறது.


Coimbatore: தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.




முதல் நாளான இன்று வேள்விப்பூசை நடத்தி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருப்பூரைச் சார்ந்த ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை MSP Groups சார்ந்தவர்கள் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றி துவக்கி வைத்தனர்.




வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பக்தியுடன் பூஜை செய்து காப்புக் கட்டி, கொடிமரம் வில்வ மாலையால் அலங்கரிக்கப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வெள்ளியங்கிரி ஆண்டவரை மனம் உருகி தரிசித்தனர். 2006 ஆம் ஆண்டு கொடிமரம் அமைக்கப்பட்டது முதல் கொடியேற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.




தொடர்ந்து வேள்விப்பூசை, அபிஷேக திருவீதி உலா, திருக்கல்யாணம், நடராசர் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் நாள்தோறும் நடைபெற இருக்கின்றன. ஐந்தாம் நாள் அன்று வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக பக்தி பரவசத்துடன் நடைபெறும்.




ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமி வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்ல உள்ளனர். திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




புண்ணியம் தேடித் தரும் சக்தி வாய்ந்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வரவேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பங்குனி உத்திரம் திருவிழா தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்களை ஈர்க்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.


Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...