சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரணியை குறைத்து மதிப்பிடாமல் அரசின் சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன் எனவும், கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.


Coimbatore: கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்து பேசியதாவது: "யாரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. அரசின் சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்."






இன்று காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். ஓரணியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்" என்றார்.






"தமிழக மக்கள் திமுகவுக்கு பிரம்மாண்டமான வெற்றியை வழங்க தயாராக இருக்கிறார்கள். கடந்த முறை 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை திமுக கூட்டணி இழந்திருந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட என்னை கோவையில் போட்டியிட முதலமைச்சர் MK Stalin வாய்ப்பு வழங்கியுள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைப்போம்" என்றார்.






AIADMK வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக கூறியது குறித்து பதிலளித்த செந்தில் பாலாஜி, "அவர்கள் தோற்று விடுவோம் என்றா சொல்லப் போகிறார்கள்? கடந்த முறை முதலமைச்சர் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர். தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகள் புதிதாக மாற்றி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்" என்றார்.






"எனக்கு கோவை வேறு கரூர் வேறு அல்ல. கரூர் அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கியுள்ளனர். அதிலும் கட்டாயம் வெற்றி பெறுவேன். 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை கோவையில் திமுக இழந்தது. அதன் பின்பு AIADMK எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும்" என்றார்.






கோவை தெற்கு தொகுதியின் வளர்ச்சி குறித்து பேசிய அவர், "பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து செயல்படுத்துவோம். கோவையில் GD Naidu மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்றார்.






"நான் எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நாங்கள் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் MK Stalin சாதனைகளை கூறி அதனால் பலர் அடைந்த மற்றும் பலனடைய போகும் பயனாளிகளை எங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவோம்" என அவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...