காணொளி காட்சி மூலம் ரூ.28 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் கோவையில் திறந்து வைத்தார்


கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் சுகுணாபுரம் பகுதியில் ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் 10.69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 160 குடியிருப்புகளையும், 1.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய சரக அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி முலம் துவக்கி வைத்தார்.



மேலும், வீட்டுவசதி வாரியம் மூலம் பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமத்தில் அரசு அலுவலர்களுக்கு 11.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் கோவையில் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...