“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “2026 தேர்தலில் திமுக தோல்வியடைந்தால், கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்; மு. க. ஸ்டாலின் தனி பாதையைத் தேர்வு செய்வார்” என்று விமர்சித்தார்.


Coimbatore: கோவை: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர், வானதி சீனிவாசன் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாக கண்ணப்ப நகர் பகுதியில் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



உடல்நலம் காரணமாக. பிரச்சாரத்தின் வானதி சீனிவாசன் பங்கேற்காத நிலையில், அவரது மகன் ஆகாஷ் கலந்து கொண்டார். மேலும், அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய அண்ணாமலை, தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவு அலை உருவாகியுள்ளது என்றும், மக்கள் தி.மு.க ஆட்சியை விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும், முதலமைச்சர் கூறும் “இரும்புக் கை” தற்போது துருபிடித்துவிட்டதாகவும் விமர்சித்தார்.



கோவை மாவட்டம் அ.தி.மு.க வின் கோட்டை என்று குறிப்பிட்ட அவர், இந்த தொகுதியில் அனைவரும் ஒன்றிணைந்து தாமரைக்காக பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி குறித்து விமர்சித்த அண்ணாமலை, “செந்தில் பாலாஜி என்ற எலி அங்கும் இங்கும் சென்று, தற்போது கோவையில் வந்து மாட்டிக் கொண்டுள்ளார்” எனக் கூறினார். மேலும், “செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தாலும், நானும் அதேபோல் பேச விரும்பவில்லை. அவர் டாஸ்மாக்கில் பத்து ரூபாய் சம்பாதித்து அதனை வாரி இறைத்து வருகிறார். கோவை தெற்கு தொகுதியில் அவர் சரித்திரம் காணாத தோல்வியை சந்திக்கப் போகிறார்” என்றார்.



மேலும், தி.மு.க வின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கி சேப்பாக்கம் வரை செல்லும் என்றும் கூறினார். தி.மு.க குடும்ப ஆட்சி நடத்துகிறது என்றும், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மாநிலம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்லும் போது மக்கள் கஞ்சா பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். இந்த அடிப்படை பிரச்சனைகளில் தி.மு.க அரசு தோல்வியடைந்துள்ளது என்றும் கூறினார்.



அறிவாலயத்தில் அடி செங்கல் வரை உருவுவேன் என்று முன்பு கூறிய தனது கருத்தை குறிப்பிட்டு, அண்ணா அறிவாலயம்குறித்து “நாங்கள் தற்போது கூட அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி கொண்டு தான் இருக்கிறோம்” என்றார். 2026 தேர்தலில் தி.மு.க தோற்றால், கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்; ஸ்டாலின் தனி பாதைக்கு செல்வார் என்றும் அவர் மீண்டும் கூறினார்.

“அவர்கள் யாருடன் சேர்வார்கள் என்பது கூட தெளிவில்லை. செந்தில் பாலாஜி வாய்ப்பைப் பார்த்து, கனிமொழியிடம் செல்வாரா அல்லது ஸ்டாலினிடம் செல்வாரா என்று முடிவு செய்வார்” என்றார்.

அடிமைக் கட்சி என்பது தி.மு.க தான் என்றும், 1977க்கு பிறகு அதிக முறை ஆட்சி செய்தது அ.தி.மு.க தான் என்றும் குறிப்பிட்டார். மேலும், தி.மு.க வின் ஊழல் பட்டியல் காங்கிரஸிடம் உள்ளது என்றும், அந்தக் கட்சியில் ஒரே குடும்பத்தினர் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

“DMK Files” தொடர்பாக பேசிய அவர், “நான் DVAC-இல் புகார் அளித்துள்ளேன். அவர்கள் பா.ஜ.க அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தி சென்றனர். அமைச்சர் காந்தி வேட்டி-சேலை ஊழல் செய்தார்; ₹160 கோடி ஊழல் தொடர்பான ஆதாரங்களையும் வழங்கியுள்ளேன். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி கமலாலயத்திற்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார். மேலும், ஆட்சி மாறியதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

“ஜனநாயகன்” திரைப்படம் லீக்கானது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், அதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறினார். படம் வெளியானபோது ரசிகனாக சென்று பார்ப்பேன் என்றாலும், இந்த விவகாரத்தில் எல்.முருகனை தொடர்புபடுத்தி பேசுவது தவறு என்றும் தெரிவித்தார். இந்த திரைப்படத்தில் பலரின் உழைப்பு இருப்பதால், இதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தேவையானால் சி.பி.ஐ விசாரணைக்கும் ஆதரவு அளிப்போம் என்றும் கூறினார்.

ராம்தாஸ் அத்வாலே தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பதிலளித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...