கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் காட்டி சத்தியமங்கலம் ஸ்டேட் வங்கியில் முறையே ரூ.13.50 லட்சம் மற்றும் ரூ.12 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் இருவருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராதத் தொகையில் ரூ.20,000-ஐ இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது இருவரும் தலைமறைவாக இருந்தனர்.
Coimbatore: போலி சம்பளச் சான்றிதழ் காட்டி ஸ்டேட் வங்கியில் ரூ.25.50 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தலா 3½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் பகுதியில் உள்ள அரசு பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் டி.வினோத்குமார். இவர் ஈரோடு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்ப்பதாகப் போலி ஆவணங்கள் மற்றும் போலிச் சம்பளச் சான்றிதழைக் காட்டி, சத்தியமங்கலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றார்.
இதற்காக அந்த வங்கியில் கணக்குத் தொடங்கி சில மாதங்கள் மாதாந்திரத் தவணைத் தொகையை (EMI) முறைப்படி செலுத்தி வந்த வினோத்குமார், பின்னர் தந்திரமாக அந்த வங்கிக் கணக்கை வேறொரு வங்கிக்கு மாற்றிவிட்டு தவணைத் தொகை செலுத்துவதை முற்றிலும் நிறுத்தி விட்டார்.
இது குறித்துச் சந்தேகம் அடைந்த ஸ்டேட் வங்கி அதிகாரிகள், மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) புகார் அளித்தனர். சிபிஐ போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வினோத்குமார் போலி ஆவணங்கள் மூலம் வங்கியை ஏமாற்றி கடன் பெற்றது அம்பலமானது.
இதேபோல், பாப்பனூர் அரசுப் பள்ளியில் பணியாற்றும் நிதிலன் என்ற மற்றொரு ஆசிரியரும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அதே ஸ்டேட் வங்கியில் ரூ.12 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதை அடுத்து இருவர் மீதும் சிபிஐ போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த இரண்டு மோசடி வழக்குகளும் கோவை தலைமை குற்றவியல் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திர மோகன் ஆஜராகி காரசாரமாக வாதாடினார்.
வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி, இலவச சட்ட உதவி மையம் மூலம் இவர்களுக்காக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சிவக்குமார், வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் ரூ.20,000-ஐ இந்த வழக்கில் வாதாடிய இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.