கிணத்துக்கடவு: மகளிரும் மாணவர்களும் திமுக அரசின் இரு கண்கள் – அரசின் சாதனைகளை முன்வைத்து கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன் பிரச்சாரம்..!

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் லட்சுமி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் குறிச்சி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.



இன்றைய பிரச்சாரத்தின் போது மக்களிடையே பேசிய அவர், “மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் அரசு தான் திராவிட மாடல் அரசு. தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தி.மு.க ஆட்சியின் இரு கண்களாக மகளிரும், படிக்கும் மாணவர்களும் இருந்து வருகின்றனர். 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்து, அவர்களின் கடன் சுமையை குறைத்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்கி பொருளாதார பாதுகாப்பு அளித்தார். விடியல் பயணத் திட்டம் மூலம் அவர்களின் தினசரி செலவுகளை குறைத்து, சேமிப்பை உருவாக்கும் சூழல் ஏற்படுத்தினார்.



வருங்கால சந்ததிகளை சீர்மையான மக்களாக உருவாக்க, மாணவர்கள் நலனுக்காக பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இளைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு செயலாற்றிட ‘நான் முதல்வன்’ திட்டம் என வளர்ச்சி மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தி பல்வேறு புரட்சிகர திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் திமுக அரசு முன்னேற்றியுள்ளது” என்றார்.

நேற்றைய தினம் குறிச்சி தெற்கு பகுதியில் பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சித்தவர்கள் இன்று அதையே தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டம், ரூபாய் 8000 கூப்பன் மூலம் தேவையான உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு தாய்மார்கள் அளித்துள்ள அமோக வரவேற்பையும் எடுத்துக்கூறினார்.



அதேபோல், பணிபுரியும் மகளிருக்கு உதவும் வகையில், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரங்களில் 1000 குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் அவர் வலியுறுத்தினார்.

கிணத்துக்கடவு தொகுதி வளர்ச்சிக்காகவும், இப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றி, எப்போதும் மக்கள் அணுகக்கூடிய பிரதிநிதியாக இருந்து பணியாற்றுவேன் என்று பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது, ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...