மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்களின் விலை 10% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோயம்புத்தூர் குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்தின் (COSMAFAN) தலைவர் சிவசண்முககுமார் கூறும் போது,

சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது.

கடந்த 45 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் வார்ப்பட ( Foundry) தொழிலின் வளர்ச்சிக்காக காஸ்மாபேன் சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு மற்றும் சிறு பவுண்டரிகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்தொழில் மூலம் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக பவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருட்களின் (Allied Materials) விலை 20% முதல் 40% வரையிலும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சீரற்ற விலை ஏற்றத்தினால் சிறு மற்றும் குறு பவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் 'காஸ்டிங்' (Casting) பொருட்களின் விலையை, தற்போதுள்ள விலையிலிருந்து 10% உயர்த்துவது எனச் சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.

பவுண்டரி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலப்பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் மற்றும் மாணிக்கம்பாளையம் பவுண்டரி கிளஸ்டர்களில் அரசு சார்பில் 'மூலப்பொருள் வங்கி' (Raw Material Bank) அமைத்துத் தர வேண்டும். குறு பவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி (GST) வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும்.

என்றார்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...