கோவை வெரைட்டி ஹாலில் மது அருந்தும்போது தகராறு: மதுக்கடை ஊழியர் கொலை வழக்கில் இருவர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுக்கடையில் மது அருந்திய இருவர் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் காய்கறி கடை வைத்துள்ள பிரபு, தனியார் நிறுவன ஊழியர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (60). கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இடையார் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் மனோஜ் (28).

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பிரபு மற்றும் மனோஜ் இருவரும் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். அப்போது அங்கு ஊழியராக பணிபுரிந்த சுந்தர்ராஜுடன் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு வாக்குவாதமாக மாறியது.

இதையடுத்து கோபமடைந்த பிரபு மற்றும் மனோஜ் இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை சுவரில் தள்ளி நெஞ்சு பகுதியில் குத்தினர். கடுமையாக தாக்கப்பட்ட சுந்தர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மதுக்கடை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

தகவல் அறிந்த வெரைட்டி ஹால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். உடற்கூறாய்வுக்காக சுந்தர்ராஜின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் பிரபு மற்றும் மனோஜ் இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...