விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள் ஏப்ரல் 14ஆம் தேதி விஷு பண்டிகையை கொண்டாட இவை அனுப்பப்பட்டுள்ளன.


Coimbatore: மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை முன்னிட்டு கோவையிலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர்,ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஈரான் -இஸ்ரேல் நாடுகள் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு வழங்கப்பட்ட நேரடி விமான சேவைகள் மார்ச் 1-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மார்ச் 9-ம் தேதி முதல் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டன. வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதும் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை ஏப்ரல் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள் மலையாள புத்தாண்டு தினத்தை கொண்டாட உதவும் வகையில் விமானங்களில் பல்வேறு காய்கறி மற்றும் பழங்கள் அதிக அளவு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 15 டன் எடையிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறும் போது, வழக்கமாக கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு கார்மென்ட்ஸ், தொழிற்சாலை சார்ந்த பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவை புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். தீபாவளி, ஓணம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வழக்கமான பொருட்களை தவிர்த்து பண்டிகை தொடர்பான பொருட்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாண்டு மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள் இப்பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு கடந்த 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...