“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” – கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருப்புக்கொடி ஏற்றி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.


கோவை: மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா, தென்னிந்திய மாநிலங்களின், குறிப்பாக தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பறிக்கும் ஒரு “வரலாற்றுத் துரோகம்” என்று சாடிய முதலமைச்சர், நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 16, 2026) தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கரூரில் கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி, “அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தொகுதி மறுவரையறை (Delimitation) என்று தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தாக்கிடும் ஒன்றிய அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக கூட்டணியையும் கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூரில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு நடத்தப்பட்டது.

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு… அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது… திக்கெட்டும் திராவிட தீ பரவட்டும்… டெல்லி பணியும் வரை இந்த தீ அணையாது…” என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...