கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


கரூர்: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுகவின் கொங்கு மண்டல முக்கிய பிரமுகரான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கரூர் செங்குந்தபுரம் நான்காவது சாலையில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான எம்.சி. சங்கர் ஆனந்திற்கு சொந்தமான ‘சங்கர் ஆனந்த் இன்பிரா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு பணி ஒப்பந்ததாரரான சங்கர் ஆனந்தின் அலுவலகத்திற்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 11 மணியளவில் வந்து திடீர் சோதனையை தொடங்கினர்.

மேலும், இதே பகுதியில் செங்குந்தபுரம் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள மற்றொரு ‘சங்கர் இன்பிரா’ அலுவலகத்திலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல, சங்கர் ஆனந்தின் வீடு அமைந்துள்ள பழனியப்பா நகர் அடுக்குமாடி குடியிருப்பிலும், மேலும் ஐந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கியுள்ளனர்.

இது தவிர, செந்தில் பாலாஜியின் மற்றொரு ஆதரவாளரான கார்த்திக்கிற்கு சொந்தமான ‘சக்தி மெஸ்’, கரூர் - கோயம்புத்தூர் சாலையில் திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ளது. அந்த சக்தி மெஸ் மற்றும் கார்த்திக்கின் கோதை நகர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவங்கியுள்ளனர்.

மேலும், கோயம்புத்தூர் சாலையில் உள்ள ‘கொங்கு மெஸ்’, ராயலூரில் உள்ள அதன் உரிமையாளர் சுப்பிரமணியின் வீடு உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 15 பேர் கொண்ட குழுக்களாக கரூரில் முகாமிட்டுள்ளதால், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...