தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Coimbatore: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.



அதன்படி, திமுக சார்பில் உடுமலை தொகுதியில் போட்டியிடும் ஜெயகுமார், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தன், வால்பாறை தொகுதியில் போட்டியிடும் சுதாகர் ஆகியோருக்கு ஆதரவாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போட்டி என்றும், இதில் தமிழ்நாடு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.



மேலும், தமிழக மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.5,000 தொகையை வங்கி கணக்குகளில் வரவு வைத்ததாகவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முழுமையாக அடிமையாக மாறிவிட்டார் என்றும், “பத்து தோல்வி பழனிச்சாமி” என்று அழைக்கப்படுபவர், இந்த தேர்தலுக்கு பிறகு “மொத்த தோல்வி பழனிச்சாமி” ஆக மாறுவார் என்றும் விமர்சித்தார்.



தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...