தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி மரியாதை செலுத்தினார்.


Coimbatore: திருப்பூர்: ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வீரத்துடன் போராடி, மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த, கொங்கு மண்டலத்தின் வீரமகனாக போற்றப்படும் தீரன் சின்னமலை அவர்களின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது திருவுருவ சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய அவர், “வெள்ளையனே வெளியேறு” என வீர முழக்கம் எழுப்பி, கொங்கு சீமையின் உரிமைக் குரலாக ஒலித்த அந்த மாவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் இந்த நாளில் நாம் போற்றிட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், அடிமைத்தனத்தை அறுத்தெறிய போராடிய அந்த வீரரின் வழியில் நாம் நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...