பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன.


கோவை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டன.



2026 சட்டமன்றத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொள்ளாச்சி சார் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமகிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்கு இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...