திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Tirupur: மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டி இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமீமுன் அன்சாரி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் என்பவர் சமூக வலைதளங்களில் தமீமுன் அன்சாரி மீது அவதூறுகளை பதிவு செய்து கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.



இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பலர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், தடா ரஹீம் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள அவதூறு பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் விதமாக பதிவிட்ட தடா ரஹீம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...