தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்தில் புதருக்குள் சென்று மாயமானது. டிசம்பர் 31ல் மூதாட்டியை தாக்கி உயிரிழக்கச் செய்த காட்டெருமையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனூர் சுற்றுவனப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக ஒரு காட்டெருமை சுற்றித்திரிந்து வந்த நிலையில், தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் திடீரென மாயமாகி வனத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த காட்டெருமை அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அட்டுக்கல் பெரும்பள்ளத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை இந்த காட்டெருமை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து வனத்துறையினர் காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.

அதன் பின்னரும் அட்டுக்கல், தாளியூர் வன எல்லைப் பகுதிகளில் காட்டெருமை சுற்றித்திரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலை அந்த காட்டெருமை தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள மோகன் என்பவரின் பாக்கு தோட்டத்துக்குள் புகுந்தது.

உடனடியாக தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்து வந்தனர். அப்போது காட்டெருமை அருகிலிருந்த புதருக்குள் சென்று திடீரென மாயமானது. அதன் பின்னர் அது எங்கும் தென்படவில்லை.

இது காட்டுக்குள் திரும்பிச் சென்றதா அல்லது வேறு பகுதிக்கு நகர்ந்ததா என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...