இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சிக்கி சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிங்காநல்லூரை சேர்ந்த அருள்பிரகாஷ், கார்த்திகேயன் ஆகியோர் கைதானர்.


Coimbatore: கோவை இருகூர் அருகே செல்போன் பறித்து தப்பிஓட முயன்ற இருவர் வாலிபர்கள், பொதுமக்கள் விரட்டியதில் சிக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோவை இருகூர் அருகே உள்ள மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர், நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை திடீரென பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட ராம்குமார் அவர்களை விரட்டி ஓடினார். அப்போது அந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் அந்த வாலிபர்களை துரத்தினர். பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக துரத்தி வர, பயந்து ஓடிய இரு வாலிபர்களும் கீழே விழுந்தனர்.

உடனே அந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து, சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (27), கார்த்திகேயன் (28) என தெரியவந்தது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இருவரையும் முறையாக கைது செய்து, பறிக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...