கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்டுகளைத் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Coimbatore: கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் பால் முகவர்கள் அதிகாலையிலேயே பொதுமக்களுக்குப் பால் விநியோகம் செய்து வருகின்றனர். ஆவின் மற்றும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் ட்ரேக்களில் அடுக்கி, முகவர்கள் குறிப்பிடும் இடங்களில் வாகனங்கள் மூலம் இறக்கி வைக்கப்படுவது வழக்கம்.




இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் கோவை மாநகர் கோவில்மேடு பகுதியில் உள்ள பால் முகவர் டேவிட் என்பவருக்குச் சொந்தமான பூத்தில் பால்கள் ட்ரேயில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மற்றும் மனைவி, ஆள் நடமாட்டம் இல்லாததைக் கவனித்து, அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ட்ரேக்களில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுத்து தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.




பின்னர் டேவிட் பாக்கெட்டுகளைச் சரிபார்த்தபோது எண்ணிக்கை குறைவாக இருப்பதை அறிந்துள்ளார். அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்தபோது, கணவன் – மனைவி இருவரும் கூட்டாகச் சேர்ந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.




இந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் டேவிட் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...