கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில்

தும்பிக்கை கருகிய நிலையில் தீக்காயங்களுடன் ஆண் யானை கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள மின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இன்று காலை சுமார் 8.40 மணியளவில், போளுவாம்பட்டி பிளாக்–1 காப்பு வன எல்லைக்கு அருகே உள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந்தோட்டத்தில் யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை மீட்டு முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அப்பகுதியில் இருந்த உயரழுத்த மின்மாற்றி அல்லது தாழ்வாகச் சென்ற மின்கம்பியை யானை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாந்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா, அல்லது விதிமுறைகளை மீறி மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மின்வாரிய அலட்சியம் அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் பாதுகாப்பற்ற மின்வேலிகள் மற்றும் தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகள் காரணமாக யானைகள் அடிக்கடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...