கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.


கோவை : மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள்மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை அடையாளம் காண அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், வழிபாட்டு தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் 717 கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை வடக்கு பகுதியில் 156 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 128 கடைகளும் உள்ளன.

இதில் கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 21 கடைகளும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வருவதால், மொத்தம் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.

மேலும், 1557, 1603, 1846 மற்றும் 1662 ஆகிய எண்களைக் கொண்ட 4 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1662 என்ற எண்ணுடைய கடை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்திலும், 2023ஆம் ஆண்டு. வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...