கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனியார் நிறுவனம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.


Coimbatore: கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் அமைந்துள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், கோவை சக்தி ஆட்டோ ஆன்சிலரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் தோட்டம் மற்றும் பராமரிப்பு உபகரணங்களுடன் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.



கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி - இடிகரை சாலையில் உள்ள அசோகபுரம் ரயில்வே கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ரூ.44 கோடி மதிப்பில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தின் தொடக்கப் பகுதியான அசோகபுரம் நான்கு வழிச்சாலை மற்றும் முடிவுப் பகுதியான ஆசிரியர் காலனி ஆகிய இடங்களில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மேம்பாலத்தின் தூண்களுக்கு இடையேயும் ரவுண்டானா பகுதிகளிலும் செடிகள் மற்றும் பசுமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, 3½ அடி உயர பீடத்தின் மீது 6 அடி உயரத்தில் நின்ற நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதுவது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார்.

சக்தி ஆட்டோ ஆன்சிலரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில், அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் டாக்டர் இ. சேனாவராயன் திருவள்ளுவர் சிலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, திருவள்ளுவரின் பெருமைகள் மற்றும் திருக்குறளின் மேன்மைகள் குறித்து எடுத்துரைத்து தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் எஸ். மோகன்ராஜ், தீபா மோகன்ராஜ், ராமு, சண்முகசுந்தரம், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனத்தின் மெஷின் ஷாப் பொது மேலாளர் எஸ். செண்பகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

மேலும், நிறுவனத்தின் தலைவர் டி.டி. விக்டர் பால் வேதநாயகம், துணைத் தலைவர் எஸ். ஆனந்தகுமார் மற்றும் துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் நிறுவன மேலாளர்கள், ஊழியர்கள், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிறுவன நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...