மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததால் மூன்று உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமியின் உறுப்பு தானம் மூன்று நோயாளிகளுக்கு புதுவாழ்வு அளித்துள்ளது. மே 10ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.




கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருப்புசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.




இந்த துயரமான சூழலிலும் மனஉறுதியுடன் செயல்பட்ட கருப்புசாமியின் குடும்பத்தினர், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.




அவரது கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு வழங்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் தானமாக வழங்கப்பட்டன.




உடல் உறுப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் கருப்புசாமியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான வெஞ்சமடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.




இளம் வயதில் உயிரிழந்த கருப்புசாமியின் குடும்பத்தினரின் மனிதாபிமான முடிவு மூன்று உயிர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...