பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பயந்த மக்கள் மரங்களில் ஏறி தப்பிய நிலையில், இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்று சாலைகளில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.

அந்த பகுதியில் இருந்த சில வாலிபர்கள், காளையை பார்த்து மரத்தின் மீது ஏறி அதன்மீது கல் மற்றும் சில பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளை அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளது.

பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காளை சாலைகளில் வேகமாக அங்கும் இங்கும் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாளாங்குளம் குளக்கரையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் காளை பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, காளையின் உரிமையாளர் யார், கயிறு அவிழ்த்து தானாக வந்ததா அல்லது யாராவது காளையை அங்கு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காங்கேயம் காளை திடீரென ஆக்ரோஷமாக நடந்து பொதுமக்களை விரட்டிய சம்பவம் காரணமாக உக்கடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...