கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Coimbatore:

இதுதொடா்பாக கோவை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை-அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபா்பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. 



இப்பணிகள் இன்று (மே 14) முதல் வரும் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்களுக்கு தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பணி தடையின்றி நடப்பதை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட இந்த 5 நாள்களிலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜிடி நாயுடு உயா்நிலை மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

வாகன ஓட்டிகள், காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...