கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை:

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.



இந்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த விக்னேஷுக்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ், கிணத்துக்கடவு தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் தனித்துவம் கொண்டது போல, கிணத்துக்கடவையும் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட முன்னேற்றமான தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதே தனது இலட்சியம் என கூறிய அவர், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால், பொதுமக்களை திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், நீண்டகாலமாக சர்ச்சையாக இருந்து வரும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...