சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.


Coimbatore: சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருவதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.



இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் (இளைஞர் அணி) கே. சூர்யா அளித்த மனுவில், கடந்த 2023ஆம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், மே 2026இல் தமிழக சட்டமன்றத்தில் “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மீண்டும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படும் மதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதோடு, சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தி பொது அமைதியை பாதிக்கும் சூழலை உருவாக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் ஆசான் மௌலானா ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...