கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: பீளமேடு முருகன் கோயில் வீதியில் உள்ள நியாய விலை கடையைப் பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்குப் பொருட்கள் அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 



தொடர்ந்து, பீளமேடு அவிநாசி பிரதான சாலை EB அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்ட பணியைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க 'விழிப்புணர்வு பிளக்ஸ்' வைக்குமாறு வார்டு சூப்பர்வைசருக்கு அறிவுறுத்தினார்.



மேலும், பாரதி காலனி 4-வது வீதி மற்றும் கோபால் நகர் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி மற்றும் ஆட்டோக்கள் சரியாக வருகிறதா என ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், சாலையோர மரக்கழிவுகளைத் தினசரி சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 



அதனைத் தொடர்ந்து, சாந்தி நகர் பகுதியில் நடைபெற்ற சாக்கடை தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு, சாக்கடையை முழுமையாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 



இந்த ஆய்வுகளின் போது நியாய விலை கடை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்குமார் (27அ வட்ட பொறுப்பாளர்), தேவி (BLA2) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...