கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறை காலத்தில் அதிகரித்துள்ள பயணிகள் நெரிசலைக் கருத்தில் கொண்டு போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அதன்படி, மே 20 முதல் ஜூன் 5 வரை வாரத்தில் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - சென்னை சிறப்பு விரைவு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை அடையும். மறுபயணமாக, மே 20 முதல் ஜூன் 5 வரை புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் சென்னை - போத்தனூர் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.




இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையில் சென்னை செல்லும் பயணிகளுக்கு இந்த சேவை பெரும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...