கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி ஹெல்மெட்டுகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.


Coimbatore: இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில், தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இயக்குனர் கே.ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் வினித் குமார், திவ்யா மற்றும் கௌதம் சாந்த் சோனி உள்ளிட்ட குழுவினர் கோவையில் உள்ள ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டுகளை பரிசோதித்ததில், ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தரமற்ற ஹெல்மெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக BIS சட்டம் 2016-ன் பிரிவு 28ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து BIS அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் எந்த பொருளையும் வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக ஹெல்மெட்டுகளில் ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும், BIS CARE செயலியின் மூலம் பொருட்களின் தரச் சான்றுகளை சரிபார்த்து வாங்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...