தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி, குழந்தைகளுக்கான போட்டிகள், தேன் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.


Coimbatore: தேனீக்கள் இயற்கையின் மிகச்சிறந்த கொடை மற்றும் அதிசயத்தக்க உயிரினமாகும். உலக உணவு உற்பத்தியில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான காய்கறிகள், பழங்கள் மற்றும் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள்தான் காரணம். இவை பயிர் மகசூலை கணிசமாக அதிகரிக்கின்றன.




தேனீக்கள் உணவுப் பாதுகாப்பின் உண்மையான நாயகர்களாக உள்ளன. தேன் மட்டுமல்லாது, பல மதிப்புமிக்க பொருட்களை தேனீக்கள் வழங்குகின்றன. சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும், பல்லுயிர் பெருக்கத்திலும் தேனீக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.




தேனீக்களைப் பாதுகாப்பது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகும். தேனீக்களின் செயல்பாடுகள் குறித்த ஆர்வத்தை மக்களிடையே அதிகரிப்பது சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். எனவே, தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அன்டன் ஜான்சா என்ற 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தேனீ வளர்ப்பாளரை நினைவு கூறும் வகையிலும் அவரின் பிறந்த நாளான மே மாதம் 20ஆம் தேதி "உலக தேனீ தினமாக" கொண்டாடப்படுகின்றது.




இந்த வருடம் அதன் முக்கிய நோக்கம், "மக்கள் மற்றும் பூமியின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதில் தேனீக்களின் பங்கு" என்ற தலைப்பில், நிலையான உணவு உற்பத்தி, பல்லுயிர் பெருக்கம் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளைப் பெறுவதில் தேனீக்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.




தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்



இதன் தொடர்ச்சியாக தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக வரும் மே மாதம் 20ஆம் நாள் புதன்கிழமை "உலக தேனீ தினம்" கொண்டாடப்பட உள்ளது.




இவ்விழாவில் தேனீக்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், தேன் உற்பத்தி மற்றும் அறுவடை குறித்து விழிப்புணர்வு வழங்கப்படும். மேலும் தேன்மெழுகு மூலம் மெழுகுவர்த்தி, சிலை, சோப்பு செய்யவும், நெல்லித் தேன் மற்றும் குல்கந்த் ஆகியவற்றின் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கமும் வழங்கப்படும்.




தேனீக்கள் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் குழந்தைகளுக்கு தேனீக்கள் சார்ந்த பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.




பங்கேற்பு விவரங்கள்



ஆர்வமுள்ள குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அனைவரும் இந்த உலக தேனீ தின விழாவில் பங்கேற்கலாம். முன்பதிவு செய்வதற்கு, உங்கள் விவரங்களை 93635 29576 என்ற அலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். அனைவரும் விழா நாளன்று காலை 8.30 முதல் 9.00 மணிக்குள் வருகை தந்து, தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...