“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறையிலும் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore:

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் (Kidney Ward) வார்டில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றியும், தண்ணீர் வசதி இன்றியும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையின் செயல்படும் சிறுநீரக வார்டில் நாள்தோறும் 30 முதல் 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுடன் தங்கி இருக்கும் உறவினர்களையும் சேர்த்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தினமும் தங்கி உள்ளனர். ஆனால், இத்தனை பேருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, பெண்களுக்கான கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருப்பதால், பெண் நோயாளிகள் மற்றும் பெண்கள் உறவினர்கள் ஆண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதாரமற்ற நிலை அவர்களின் உடல்நலத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கழிப்பறைகளில் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதுடன், தண்ணீர் இல்லாத நிலை, உணவுக் கழிவுகள் மற்றும் மருத்துவக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் வயதான நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கூறுகையில், “கடந்த 7 மாதங்களாக இந்த வார்டுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறேன். கழிப்பறையில் தண்ணீர் இல்லை. மருத்துவக் கழிவுகள் மற்றும் உணவுக் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஒரு வார்டில் மட்டுமல்லாமல், மருத்துவமனையின் பல வார்டுகளிலும் இதே நிலை நீடிப்பதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை பெரிதும் நம்பி வரும் பொதுமக்களுக்கு கழிப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை உரிய சுகாதாரத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...