பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை சேகரிப்பு, தண்ணீர் விநியோகம், சாக்கடை தூய்மை, தெருவிளக்கு, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.






துரைசாமி நாயுடு லேஅவுட், பெருமாள் கோயில் முன்பு, பாரதி காலனி பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகளை சக்திமான் இயந்திரம் மூலம் வெட்டும் பணி நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை மேற்கொள்ளுமாறு பணியாளரிடம் அறிவுறுத்தினார். இதில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார்.








அதைத் தொடர்ந்து, முத்து வீதி, முத்து சந்து பகுதியில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி சரியாக வருகிறதா என்பதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.








மேலும் முக்கூட்டு ராமசாமி வீதி, கச்சம நாயுடு வீதி பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்பதை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். சாலையோரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் அறிவுறுத்தினார்.




இந்த ஆய்வு மூலம் வார்டு 27 பகுதியில் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து, பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...