கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் துறை ₹19,500 அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கியது.


Coimbatore: கோவை சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி மற்றும் ஆட்டம் போட்டபடி வேகமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, வைரலான வீடியோவை அடிப்படையாக கொண்டு வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கோவை மாநகர காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தமாக ₹19,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் காவல் துறையினர் எச்சரித்து, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...