புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேசமயம், திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.


கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் நேர்மையான மற்றும் மக்கள் நல ஆட்சியை முன்னுதாரணமாக கொண்டு, புதிய முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் தெய்வங்களின் அருளும், மக்களின் ஆதரவும் புதிய அரசுக்கு கிடைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், முதல்வரின் ஆட்சி மக்கள் நல மறுமலர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்கள் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.

அதில், முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோயில்களுக்கு அவர்களது வாரிசுகள் மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும், பரம்பரை அறங்காவலர்களை சட்டப்பூர்வ நிர்வாகிகளாக அறநிலைத்துறை அங்கீகரிக்க வேண்டும், மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோயில் நிர்வாக குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மேலும் இந்து சமய அறநிலைத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு இடமளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...