சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டதால் POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது POCSO சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி இரவு சூலூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக ஐஜி ரம்யா பாரதி தெரிவித்தார்.




மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கண்ணம்பாளையம் பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யும்போது தப்பிக்க முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை குற்றவாளி கார்த்தி ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இவ்வழக்கில் POCSO சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஜி ரம்யா பாரதி உறுதிப்படுத்தினார்.




குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவளை அழைத்துச் சென்றதாக வாக்குமூலம் கிடைத்துள்ளதாகவும் ஐஜி தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...