கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


கோவை: இஸ்லாமியர்களின் புனித ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாகக் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.




இஸ்லாமியர்கள் ஈகைத் திருநாளாக கடைபிடிக்கும் பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக இந்த ஈகை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நபிகளின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.






இந்நாளில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி என்று அழைக்கப்படும் இறைச்சிகளை தானமாக வழங்குவார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் அவர்களுக்கு தகுந்தவாறு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குவார்கள். மேலும் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.




அதன்படி இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜாக் அமைப்பினர் உலகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.






இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். மக்கள் நலமுடன் வாழ வேண்டும், உலகம் அமைதி பெற வேண்டும், அனைவரிடமும் ஈகை பண்பானது மலர வேண்டும் என்று இறைவனை வேண்டி தொழுகை மேற்கொண்டனர்.




நபிகளின் தியாக உணர்வை போற்றும் வகையில் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...