தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்திச் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள், குறிப்பாக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


Coimbatore: கோவை விமான நிலையத்திற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் வருகை தரும் நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய நுழைவாயில் மற்றும் வளாகப் பகுதிகளில் மொத்தம் 600 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் சமயங்களில் வாகனங்கள் விதிமீறி நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஏற்கனவே இடப்பற்றாக்குறை பிரச்சினை நிலவி வரும் கோவை விமான நிலையத்தில், அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகையின் போது நிலைமை மேலும் மோசமடைகிறது. நுழைவாயிலில் மூன்று லேன்கள் இருந்தபோதிலும், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது என தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் 11.50 மணி வரை சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து மூன்று விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேறிய நேரத்தில், அரசியல் பிரமுகரை வரவேற்க வந்த வாகனங்களால் நுழைவாயில் பகுதி முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் சிக்கித் தவித்ததுடன், முதியோர் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தொடர்கதையாக மாறிவிட்ட நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண விமான நிலைய நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...