மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சூலூர் எம்எல்ஏ சுகுமார், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கோவை:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார், தனது புதுப்பிக்கப்பட்ட தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருமார்களின் முன்னிலையில் திறந்து வைத்து மத நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சம்பத்குமார், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத குருமார்களை அழைத்து ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்களிடம் ஆசி பெற்று தனது அலுவலக பணிகளைத் தொடங்கினார்.

இந்நிகழ்வில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்கள் ஒருவர் தவறவிட்ட மூன்று பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்து நேர்மை

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...