கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்கி நகர், கோபால் நகர், ஜெகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர தூய்மை, சாக்கடை பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறியப்பட்டன.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரடியாகப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார்.



கல்கி நகர் பகுதியில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.




அவிநாசி பிரதான சாலையில் ஸ்ரீ திருப்பதி வெங்கடாஜலபதி நகர் முதல் மணல் பாலம் வரையிலான பகுதிகளில் சாலையோரத்தில் குவிந்திருந்த குப்பைகள் மற்றும் மண்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் ஆய்வு செய்தார். சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.




கோபால் நகர் பகுதியில் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மண்கள் மற்றும் குப்பைகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.




ஜெகநாதபுரம் பகுதியில் தினசரி குப்பை வாங்கும் பேட்டரி ஆட்டோ சரியாக வருகிறதா என்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பல்வேறு குடிமைச் சேவைகள் குறித்து விசாரித்தார். தினசரி உப்பு தண்ணீர் சரியாக வருகிறதா, நல்ல தண்ணீர் ஆறு நாட்களுக்கு ஒரு முறை சரியாக வருகிறதா, சாக்கடை சரியாக சுத்தம் செய்யப்படுகிறதா, தெருவிளக்கு சரியாக எரிகிறதா, கொசு புகை மருந்து வாரத்துக்கு ஒரு முறை அடிக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...